உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி ரோப் காரில் தேசிய பேரிடர் ஒத்திகை

பழநி ரோப் காரில் தேசிய பேரிடர் ஒத்திகை

பழநி:பழநி முருகன் கோயில் ரோப்காரில் ஆபத்து நேரத்தில் பக்தர்களை மீட்பது குறித்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை நடத்தினர்.தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டண்ட் சுதாகர் தலைமையில் சென்னை அரக்கோணத்தை சேர்ந்த 25 பேர் கொண்ட குழுவினர் பழநி முருகன் கோயில் ரோப் கார் நிலையத்திற்கு வந்தனர். இவர்கள் பேரிடர் ஒத்திகை நடத்தினர். உதவி கலெக்டர் சுகுமார், தாசில்தார் பிரசன்னா, கோயில் உதவி கமிஷனர் லட்சுமி, கண்காணிப்பாளர் உமாசெல்வி, தீயணைப்பு நிலைய அலுவலர்கள் காளிதாஸ், பாஸ்கரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ