சாலைமறியல் அறிவிப்பால் பேச்சுவார்த்தை
நத்தம் : நத்தம் அருகே பரளிபுதுார் ஊராட்சியில் உள்ளது தேத்தாம்பட்டி . இங்கு மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்டிலிருந்து டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் ஓராண்டு காலமாக இயக்கவில்லை. ஆத்திரமடைந்த மக்கள் நேற்று காலை மதுரை - நத்தம் சாலையில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். தகவல் அறிந்த தாசில்தார் சரவணக்குமார், மண்டல துணை தாசில்தார் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் தேத்தாம்பட்டி கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போக்குவரத்து அதிகாரிகளுடன் பேசி மீண்டும் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கபடும் என கூற மறியல் கைவிடப்பட்டது.