மின்வேலி அமைத்து விபத்து ஏற்பட்டால் இழப்பீடு இல்லை
எரியோடு: மின்வேலிகளால் ஏற்படும் விபத்திற்கு இழப்பீடு கிடைக்காது என மின்வாரியத்தினர் கூறினர். வேடசந்துார், குஜிலியம்பாறை தாலுகா மலை சார்ந்த பகுதிகளில் வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் மின்வேலி அமைப்பதாக புகார்கள் வருகின்றன. மின்வேலி அமைப்பது கடும் தண்டனைக்குரிய குற்றச் செயல். இதனால் உயிரிழப்பு நேரிட்டால் மின் வேலி அமைத்த நபர் மீது வழக்கு பதியப்படும். உயிரிழப்புக்கு மின் வேலி அமைத்தவர்களே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படும். இதுபோன்ற மின் விபத்து தொடர்பாக மின்சார வாரியம் எந்தவித பொறுப்பும் ஏற்காது. இழப்பீடும் வழங்காது. இதே போல் டிராக்டர், லாரிகளில் உயரமாக லோடு எடுத்து செல்லும்போது மின் ஒயர்களை கவனித்து வாகனங்களை இயக்க வேண்டும். மின் ஒயர்களை தொடும் உயரத்திற்கு பாரம் ஏற்றி செல்லக்கூடாது. வீடு கட்டும் பொதுது மின் பாதைக்கு அருகில் உயர் மட்டத்திலும், கிடைமட்டத்திலும் போதிய இடைவெளி விட வேண்டும். ஆடு, மாடு போன்ற கால்நடைகளை மின்கம்பம், இழுவை கம்பிகளில் கட்ட கூடாது என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.