உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி

 காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி

கன்னிவாடி: அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளை, காமதேனு சாரிட்டிஷ் சார்பில், கன்னிவாடி அரசு சமுதாய நல மையத்தில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கல் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் நவீன்குமார் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் சரவணன், சாந்தினி, மருதைகலாம் முன்னிலை வகித்தனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய காசநோயாளிகளுக்கு, சத்துமாவு, சுண்டல், நிலக்கடலை, சிவப்பு அவல், பேரீச்சம்பழம் ஆகிய பொருட்கள் கொண்ட பெட்டகத்தை, காசநோய் பிரிவு துணை இயக்குனர் முத்துப்பாண்டி வழங்கினார். திட்ட மேலாளர் இன்னாசிராஜா, நலக்கல்வியாளர் சென்றாய பெருமாள், காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் ராஜா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ