உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தெருக்களில் ஆக்கிரமிப்பு; பட்டா இல்லாது அவதி கொடைக்கானல் 16 வது வார்டில் அவலம்

தெருக்களில் ஆக்கிரமிப்பு; பட்டா இல்லாது அவதி கொடைக்கானல் 16 வது வார்டில் அவலம்

கொடைக்கானல்: - தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்பால் அவதி ,பட்டா இல்லாது தவிக்கும் மக்கள் என கொடைக்கானல் நகராட்சி 16 வது வார்டு மக்கள் பாதிக்கின்றனர்.காமராஜர் சாலை, லாஸ்காட் ரோடு, டர்னர்புரம், பிரெஞ்ச் லேடன்ட் பகுதிகளை கொண்ட இந்த வார்டில் திருஇருதயாண்டவர் சர்ஜ், சின்ன மாரியம்மன் கோயில், ஆர்.டி.ஒ., அலுவலகம் உள்ளது. தெரு நாய்கள் தொல்லையால் தினமும் மக்கள் பரிதவிக்கின்றனர். தெருக்களில் ஆக்கிரமிப்பால் வார்டு மக்கள் பாதிக்கின்றனர், பட்டா இல்லாததால் பல சலுகைகளை பெறமுடியாது மக்கள் தவிக்கின்றனர்.ரேஷன் கடையில் கட்டுப்பாடற்ற பொருட்கள் சரிவர சப்ளை செய்வதில்லை. சமூக விரோத செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இங்கு ரோட்டில் உலாவும் கால்நடைகள் என ஏராளமான பிரச்னைகள் உள்ளன.

நடவடிக்கை இல்லை

சுரேந்தர், பொறியாளர் : தெருக்களில் குறுக்கு சந்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. தெரு நாய்களால் அச்சுறுத்தல் உள்ளது. காமராஜர் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் காலை, மாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இந்த ரோட்டில் குடிமகன், போதை வஸ்து பயன்படுத்துவோரால் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. சாக்கடைகளுக்கு மேல் மூடி அமைக்க வேண்டும். வார்டில் குறை குறித்து புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை.

கால்நடைகளால் விபத்து

எபினேசர், முன்னாள் கவுன்சிலர் : லாங்காட் ரோடு பகுதியில் எந்தவித வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை. அரசு மேல்நிலைப்பள்ளி அருகே காலை, மாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மாணவர்கள் அவதிபடுகின்றனர். ரோட்டில் உலாவும் கால்நடைகளால் விபத்துகள் ஏற்படுகிறது. வார்டில் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

சாக்கடைகளுக்கு மூடி

நஜீமாபானு, கவுன்சிலர் (ம.தி.மு.க.,): ரூ. 1 கோடிக்கு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. தெரு நாய், கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா கிடைக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. வார்டில் உள்ள சாக்கடைகளுக்கு மூடி அமைக்கப்படும்.ரோட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறுக்கு சந்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடி வார்டில் சிசிடிவி கேமரா , வளர்ச்சிப் பணிகளை ஏற்படுத்த நகராட்சியில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஏராளமான பணிகள் செய்ய உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ