உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உரிமம் கடைகளில் மக்காச்சோளம் விதைகள் வாங்க அதிகாரி அறிவுரை

உரிமம் கடைகளில் மக்காச்சோளம் விதைகள் வாங்க அதிகாரி அறிவுரை

திண்டுக்கல்: திண்டுக்கல், கரூர் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் ஐரீன் பிரியதர்ஷினி அறிக்கை: திண்டுக்கல் மாவட்டத்தில் 2024ல் 86 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோள சாகுபடி செய்யப்பட்டது. இதற்கு நிலையான நல்ல விலை கிடைப்பதால் இந்தாண்டும் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் . விவசாயிகள் ஹைபிரிட் வீரிய ஒட்டு ரக விதைகளையே விதைக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஏறக்குறைய 50க்கு மேற்பட்ட வீரிய ஒட்டு ரகங்களில் 700 டன் மக்காச்சோள விதைகள் விவசாயிகளால் வாங்கப்பட்டு விதைப்பு செய்யப்படுகிறது. மக்காச்சோள விதைகளை விற்பனை உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். உரிமம் பெறாமல் விதைகளை இருப்பு வைப்பதும், விற்பனை செய்வதும் குற்றமாகும். விதைக்கு விதைப்பரிசோதனை நிலையத்தால் வழங்கப்படும் முளைப்புத்திறன் அறிக்கை உள்ளதை சரிபார்த்து வாங்க வேண்டும். விதை விற்பனை செய்யும்போது பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட்டு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை