உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஊராட்சி பிரிவிற்கு குறி வைக்கும் அதிகாரிகள்: ஆதாயத்திற்காக மூவ்

ஊராட்சி பிரிவிற்கு குறி வைக்கும் அதிகாரிகள்: ஆதாயத்திற்காக மூவ்

ஆத்துார்: வட்டார வளர்ச்சி பிரிவில் உள்ள சிலர் ஊராட்சிக்கான இடமாற்றத்தை கைப்பற்ற மும்முரம் காட்டுகின்றனர்.மாவட்டத்தில் ஆத்துார், ரெட்டியார்சத்திரம், நத்தம், குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, பழநி, கொடைக்கானல், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, கொடைக்கானல் உட்பட 14 ஒன்றியங்கள் உள்ளன. வட்டார ஊராட்சிகளை கவனிக்கும் ஒரு பி.டி.ஓ., ஊராட்சிகளின் நிர்வாகத்தை கண்காணிக்கும் வகையில் ஒரு பி.டி.ஓ., என தனித்தனியே பணியாற்றி வருகின்றனர்.ஜன. 5 வரை வட்டார ஊராட்சிக்கென பணியாற்றிய பி.டி.ஓ.,க்கள் சிலர் தற்போது அதே ஒன்றியத்திலோ பிற ஒன்றியங்களிலோ ஊராட்சிக்கான பணியிடத்திற்கு மாறுதல் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நலத்திட்ட பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு முழுமையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டில் வரும் என்பதால் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.கொரோனா தொற்று காலத்தில் தனி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் வளர்ச்சி துறையின் உள்ளாட்சி அமைப்புகள் இருந்ததால் விருப்பம் போல் செலவின அங்கீகாரம், நிதி ஒதுக்கீடு, காசோலை கையாளும் பணிகள் தாராளமாக இருந்தது. ற ஊராட்சி களுக்கான பி.டி.ஓ., பதவியை கைப்பற்றும் முயற்சியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.இதில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை கொண்ட திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை தொகுதிக்குட்பட்ட ஒன்றியங்களில் வாய்ப்பினை பெற ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களின் தொகுதிகளில் உள்ள ஒன்றியங்களில் இது போன்ற பணியிட மாற்றத்தை பெறுவதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரே பணியிடத்திற்கு சில குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.அரசியல் செல்வாக்கு மிக்க நபர்கள் மூலம் இதற்கான காய்களை நகர்த்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை