ரயில் மோதி மூதாட்டி பலி
எரியோடு: எரியோடு அருகே வெம்பூர் சக்தி நகரை சேர்ந்த சுப்பிரமணி மனைவி வள்ளியம்மாள் 80. கணவர் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் மகள் பார்வதியுடன் வசித்தார். சரிவர காது கேட்காத நிலையில் அப்பகுதி தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி இறந்தார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.