உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மூவரை வெட்டிய வழக்கில் ஒருவர் கைது

மூவரை வெட்டிய வழக்கில் ஒருவர் கைது

எரியோடு: எரியோட்டில் இருக்கும் 'டாஸ்மாக்' மதுக்கடையில் ஜூன் 13 இரவு மது குடித்த எலப்பார்பட்டி, மீனாட்சிபுரம் இளைஞர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக மறுநாள் இரு கிராம இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் எலப்பார்பட்டி ஸ்ரீதர் 20, படுகாயமடைந்தார். இவ்வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமின் பெற்ற மீனாட்சிபுரத்தை சேர்ந்த 8 பேர் நேற்றுமுன்தினம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தபோது நகர அ.தி.மு.க., அலுவலகம் அருகில் மறைந்திருந்த 15 பேர் கும்பல் மீனாட்சிபுரம் மதன் 23, கருப்புசாமி 20, அருண்குமார் 20 ,ஆகியோரை வெட்டிவிட்டு தப்பியது. இவ்வழக்கில் எலப்பார்பட்டி ஆனந்தசுகன் 20 கைதானார். மற்றவர்களை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ