உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொடரும் பாதிப்பு : வனவிலங்குகளால் பாழாகும் பயிர்கள்: ரூ.பல லட்சம் இழக்கும் விவசாயிகள்

தொடரும் பாதிப்பு : வனவிலங்குகளால் பாழாகும் பயிர்கள்: ரூ.பல லட்சம் இழக்கும் விவசாயிகள்

மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அருகே விவசாய நிலங்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் உள்ளது. இப்பகுதிகளில் தென்னை, மா,கொய்யா,கரும்பு,மக்காச்சோளம், நெல்,வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விளைவித்து வருகின்றனர். வனப் பகுதியில் போதுமான தண்ணீர், உணவு கிடைக்காத நிலையில் வனவிலங்குகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாய பொருட்களை சேதப்படுத்து கின்றன. இதனால் விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் அடைவது மட்டுமில்லாமல் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது. விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

PR Makudeswaran
ஜூலை 27, 2025 10:19

வனவிலங்குகள் ஆக்கிரமிக்கனவா? அரசியல்வாதிகளின் பின்புலத்தால் மனிதர்கள் வாயில்லா வனவிலங்களை தொல்லை படுத்தி அவற்றின் வாழ்வாதாரத்தை பறித்தது உங்கள் கண்களுக்கு புலப்படாது. நமக்கு வந்தால் மட்டுமே ரத்தம்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 27, 2025 09:03

தவறாக நினைக்காதீர்கள் , இவர் உடை இவர் இதனை சார்ந்து இருக்கிறார் என்று உணர்த்துகிறது . வனவிலங்குகளின் இடத்திற்கு சென்று அதனால் எல்லாம் பாழாகிறது என்று கூறுவது வேடிக்கைக்குரியது .


புதிய வீடியோ