உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் கோயில்பூங்கா திறப்பு

பழநியில் கோயில்பூங்கா திறப்பு

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவர் பூங்கா சிவகிரி பட்டி பைபாஸ் சாலை பகுதியில் செயல்பட்டு வருகிறது.இதில் பராமரிப்பு பணி நிறைவு பெற்றநிலையில் நேற்று முதல் இயங்கத் தொடங்கியது.மூன்று வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.10 நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. பள்ளி மூலமாக குழுவாக வரும் குழந்தைகளுக்கு பாதி கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனியாக பணம் கட்ட வேண்டும். ரூ.30 முதல் ரூ.70 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. காலை 9:00 மணி முதல் பூங்கா திறந்திருக்கும். பூங்கா திறப்பு விழாவில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, துணை கமிஷனர் வெங்கடேஷ், உதவி கமிஷனர் லட்சுமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !