உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாடிக்கொம்பு கோயிலில் கோசாலை திறப்பு

தாடிக்கொம்பு கோயிலில் கோசாலை திறப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு சவுந்திராஜ பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வார் சன்னதி அருகில் கோசாலை அமைக்கப்பட்டது.7 பசுக்கள் கட்டி வைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ள இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஹிந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் லட்சுமிமாலா தலைமை வகித்தார். அறங்காவலர் குழுத் தலைவர் விக்னேஷ் பாலாஜி முன்னிலை வகித்தார். கோ பூஜை நடத்தப்பட்டது. பசுக்களுக்கு வாழைப்பழம், புல், கோதுமை, தவிடு உள்ளிட்டவை பக்தர்களால் வழங்கப்பட்டது.கூடுதலாக பசுக்கள் வந்தால் இடவசதி அதிகரிக்கப்படும். தானமாக வழங்கும் பசுக்களை கைம்பெண்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வாசுதேவன், சுசீலா, தி.மு.க., மாநகர பொருளாளர் சரவணன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை