உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி ஆர்.டி.ஓ., அலுவலக பொருட்கள் ஜப்தி: பேச்சுவார்த்தையில் அவகாசம்

பழநி ஆர்.டி.ஓ., அலுவலக பொருட்கள் ஜப்தி: பேச்சுவார்த்தையில் அவகாசம்

பழநி : பழநி சித்த மருத்துவக் கல்லுாரிக்கு இடம் வழங்கிய நில உரிமையாளரான பழனிசாமி குடும்பத்தினருக்கு நிலுவை தொகை தாமதமானதால் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்ற உத்தரவுப்படி வந்த ஊழியர்கள்பேச்சுவார்த்தைக்கு பின் திரும்பி சென்றனர். பழநி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற ஊழியர்கள் வருகை புரிந்தனர். பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் கட்டப்படவுள்ள சித்த மருத்துவ கல்லுாரிக்கு தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த பழனிசாமி குடும்பத்தினர் 1988ல் நிலம் வழங்கினர். இந்த இடத்திற்கான விலை நிர்ணயம் செய்வதற்கான வழக்கு பழநி சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பில் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். சார்பு நீதிமன்ற உத்தரவை 2011 ல் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. நிலுவை தொகை வழங்க அரசு காலதாமதம் செய்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி ரேணுகாதேவி, ரூ. ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாய் வழங்க தாமதம் செய்ததால் பழநி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி நேற்று (அக்.14ல்) நீதிமன்ற ஊழியர்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் கால அவகாசம் கேட்க திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை