உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நிதி நெருக்கடியில் ஊராட்சிகள் தவிப்பு! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

நிதி நெருக்கடியில் ஊராட்சிகள் தவிப்பு! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

மாவட்டத்தில் 306 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் குடிநீர், தெரு விளக்கு, ஆப்பரேட்டர்,பணியாளர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட அடிப்படை பணிகளை பராமரிக்க, மாநில நிதிக்குழு மானிய நிதியிலிருந்து ஒவ்வொரு மாதமும் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் இந்த நிதியே 2, 3 மாதங்களுக்கு ஒரு முறை தான் வருவதாகவும் அந்த நிதியிலிருந்து முழு சுகாதார இயக்க பணியாளர்களுக்கும் சம்பளம் பிடித்துக் கொள்வதாகவும் கூறுகின்றனர். தற்போது குறைத்து வழங்குவதாகவும் குமுறுகின்றனர். அதேபோல் ஊராட்சிகளில் நடக்கும் பேவர் பிளாக், தடுப்பு சுவர் உள்ளிட்ட பணிகளுக்கு பேக்கேஜ் டெண்டர் இல்லை என கூறுகின்றனர். ஆனால் ஒன்றிய அலுவலகத்திலேயே வைத்து அனைத்து பணிகளுக்குமான டெண்டரை முடித்து விடுவதாகவும், பணிகள் முடிந்த பிறகு தலைவரின் கையெழுத்தை கேட்பார்கள். தற்போது அதுவும் கேட்பதில்லை. பெரும்பாலான போர்வெல்களில் தண்ணீர் இல்லாத நிலையில் இருக்கின்ற மோட்டார்.பழுதடைந்தால் அதை பராமரிக்க கூட நிதியில்லை. இதனால் பெரும்பாலான ஊராட்சிகள் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மோட்டார் கடைகளுக்கு கடன் கொடுக்க வேண்டியுள்ளது. அதே சில ஊராட்சிகள் மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளது. மக்கள் பாதிக்கப்படுகினறனர். மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை