| ADDED : பிப் 29, 2024 07:35 AM
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையை துார் வாருவதற்கு பூமி பூஜை போடப்பட்டு பூர்வாங்கப் பணிகள் தொடங்கியதுஒட்டன்சத்திரம் வடகாடு மலைப்பகுதியில் பரப்பலாறு அணை உள்ளது. 40 ஆண்டுகளாக ஏற்பட்ட மண் பதிவுகள் காரணமாக அணையின் அளவு குறைந்துள்ளது. துார் வார விவசாயிகள் வலியுறுத்தினர். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அணையை துார்வார அரசிடம் கோரிக்கை வைத்தார். அனுமதி கிடைக்க துார் வாரும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. பழநி அமராவதி வட்ட நீர்வளத்துறை சிறப்பு தலைமை பொறியாளர் ஆர்.பாண்டி தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., சரவணன், தாசில்தார் சசி, நங்காஞ்சியாரு வடிநில பழநி கோட்ட செயற்பொறியாளர் ஏ. பாலமுருகன், வேடசந்துார் குடகனாறு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் எஸ்.தனசேகர், பரப்பலாறு அணை பிரிவு இளம் பொறியாளர் எம் .செந்தில், வனச்சரக அலுவலர் ராஜா, ஊராட்சித் தலைவர்கள் தனலட்சுமி முருகானந்தம் பன்னீர்செல்வன், வேலுச்சாமி, முன்னாள் தலைவர் செல்லமுத்து கலந்து கொண்டனர்.