| ADDED : ஜன 29, 2024 06:11 AM
செடிகளால் ஏற்படும் பாதிப்புஒட்டன்சத்திரம் நகராட்சி கைராசி நகர் வழியாக செல்லும் ஓடையில் செடிகள் முளைத்துள்ளது. இதனால் மழை நேரங்களில் தண்ணீர் செல்லாமல் நிறைந்து வெளியேறுகிறது. புதர் மண்டியுள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -முத்தையன்,ஒட்டன்சத்திரம்.---------டூவீலர்களால் அவதிப்படும் மக்கள்தாண்டிக்குடி குப்பம்மாள்பட்டி பஸ் ஸ்டாண்டில் சிலர் டூவீலர்களை நிறுத்துகின்றனர். இதனால் பயணிகள் வெயில், மழை நேரத்தில் பஸ் ஸ்டாண்டை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். டூவீலர்கள் நிறுத்தாமல் தடுக்க வேண்டும். டி.பாலன்,குப்பம்மாள்பட்டி---------பள்ளத்தால் ஏற்படும் விபத்துக்கள்திண்டுக்கல் ஆர்.எஸ். ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் பள்ளம் உள்ளது. இரவில் இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கள் நடக்கின்றன. பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஞ்சித்குமார், திண்டுக்கல்.----------சேதமான மின்கம்பத்தால் அச்சம்மோர்பட்டி பெருமாள்கோவில்பட்டியில் கோயில்களுக்கு செல்லும் வழியில் இருக்கும் மின்கம்பம் சேதமாக கிடக்கிறது. இதனால் பாதசாரிகள் எந்நேரமும் அச்சத்துடனே கடந்து செல்லும் நிலை உள்ளது. மின் கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்கணன், அய்யலுார்.-----------சேதமான ரோடால் அவதிசாணார்பட்டியிலிருந்து கோணப்பட்டி வழியாக செல்லும் ரோடு சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் தினமும் இவ்வழியில் செல்லும் பள்ளி மாணவர்கள் பாதிப்பை சந்திக்கின்றனர். ரோடை புதுப்பிக்க வேண்டும். கருப்பன், சாணார்பட்டி.------------குப்பையால் உருவாகும் சீர்கேடுதிண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில் குப்பையை கொட்டி அகற்றாமல் அப்படியே விடப்பட்டுள்ளளது. இதனால் அங்கும் இங்குமாய் ரோடுகளில் குப்பைகள் சிதறி கிடக்கிறது. முறையாக இங்கு குப்பை தொட்டி வைத்து தினந்தோறும் குப்பையை அகற்ற வேண்டும். சக்திவேல், திண்டுக்கல்.------------தொற்று பரப்பும் கழிவுநீர்திண்டுக்கல் காந்தி மார்க்கெட் அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடாக உள்ளது. கொசு உற்பத்திக்கும் துணை போகிறது. துார்வாரி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரபு, திண்டுக்கல்.------------...................................................................