உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெருமாள் கோயில் வருடாபிஷேகம்

பெருமாள் கோயில் வருடாபிஷேகம்

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் 2023 பிப்.1ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று வருஷாபிஷேகம் நடந்தது. பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் 108 கலசங்கள்,, 108 தேங்காய் வைத்து புன்யாவஜனம், அக்னி பிரதிஷ்டை, மகாலட்சுமி, லட்சுமிநரசிம்மர், பஞ்ச கந்த, சாந்தி யாக பூஜைகளும், பின்னர் மாலையில் திருக்கல்யாணம், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. திருவெள்ளறை பெருமாள் கோயில் தலைமை அர்ச்சகர் ரமேஷ் பட்டாச்சரியர் தலைமையிலான குழுவினர் நடத்தினர். ஏற்பாட்டினை முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் என்.பத்மநாபன், ரியல் எஸ்டேட் பிரமுகர் என்.ஆர்.ஏ. முரளிராஜன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி