உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அடிப்படை வசதிகள் இல்லை ஜல்லிகட்டிற்கு அனுமதி கொடுங்க குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்

அடிப்படை வசதிகள் இல்லை ஜல்லிகட்டிற்கு அனுமதி கொடுங்க குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்

திண்டுக்கல்: கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார் தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 270 மனுக்கள் பெறப்பட்டன. கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. திண்டுக்கல்லை அடுத்த சித்தரேவு கிராம மக்கள் அளித்த மனுவில், மின்சாரம், குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் 20 ஆண்டுகளாக கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆக்கிரமிப்புகளும் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.திண்டுக்கல் நாராயணபிள்ளை தோட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவகுமார் 45, கோரிக்கை மனுவுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். விசாரணையில், இவரது தோட்டத்தில் ஏராளமான பன்றிகள் தினமும் மேய்கின்றன. அவற்றை விரட்டினால் பன்றிகளை வளர்ப்பவர்கள் என்னையும், எனது தாயையும் மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வந்தது தெரிந்தது. வடமதுரையை அடுத்த செங்குளத்துப்பட்டியை சேர்ந்த ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க நிர்வாகிகள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என கேட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை