மேலும் செய்திகள்
வீடு புகுந்து திருடிய சிறுவர்கள் கைது
02-Nov-2025
திண்டுக்கல்: விளையாட்டு போட்டியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். சிறுமலை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சுரேஷ் 40. அதே பகுதியில் விளையாட்டு போட்டி நடத்தினார். அப்போது, திண்டுக்கல் அண்ணாநகர் சிவா 22, பிரகாஷ் 27, ஆகியோர் கேலி செய்தனர். இவர்களுக்கும் சுரேஷ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு சுரேஷ் வீட்டில் சிவா, பிரகாஷ், 14 வயது சிறுவன் சென்று பெட்ரோல் குண்டு வீசினர். வெளியில் காய வைத்திருந்த போர்வைகள் தீப்பிடித்து எரிந்தன. சுரேஷ் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது இவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். தாலுகா போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
02-Nov-2025