உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இரவு நேரத்தில் ரோடு வளைவுகளில் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு; கண் கூசும் எதிர் திசை வாகன விளக்கால் விபத்துகள்-

இரவு நேரத்தில் ரோடு வளைவுகளில் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு; கண் கூசும் எதிர் திசை வாகன விளக்கால் விபத்துகள்-

-மாவட்டத்தில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய ரோடுகள் அனைத்தும் நான்கு வழிச்சாலையாகவும், சென்டர் மீடியன் எனப்படும் மையத்தில் ரோடு இரு கூறாக பிரிக்கும் அமைப்பு கொண்டதாகவும் மாறி வருகிறது. திண்டுக்கல்லில் இருந்து நத்தம், திருச்சி, மதுரை, கரூர், கோயம்புத்துார் வழிககள் நான்கு வழிச்சாலையாக மாறியுள்ளன. இதுதவிர எரியோடு வழியே கரூர் ரோட்டிலும், வத்தலக்குண்டு ரோட்டிலும் சென்டர் மீடியன் அமைப்புடன் ரோடு அகலமாக்கும் பணி நடக்கிறது. இவ்வழித்தடங்களில் எதிரே வாகனங்களின் முகப்பு விளக்குகள் இரவு நேரத்தில் கண் கூச வைக்கும் என்பதால், அதனை தவிர்க்க சென்டர் மீடியன் பகுதிகளில் அரளி செடிகள் வளர்க்கப்படுகிறது. இவற்றை ஆடு, மாடு சாப்பிடாது என்பதால் இதற்காக அவை ரோட்டின் மையப்பகுதிக்கு வராது என்பதாலும், வேர் அதிகம் பரவி ரோட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்பதற்காக வளர்க்கப்படுகிறது. ரோடு பணி துவக்கத்தில் அதிக ஆர்வத்துடன் பராமரிக்கப்பட்ட சென்டர் மீடியன் அரளி செடிகள் தற்போது பல இடங்களில் அறவே மறைந்தும், காய்ந்தும் கிடக்கின்றன. குறிப்பாக வளைவு பகுதிகளில் எதிர் திசை வாகனங்களின் முகப்பு விளக்கு பிரகாசம் வாகன ஓட்டிகளை அதிகளவில் பாதிக்கிறது. தொடர்ந்து சீராக வாகனங்களை செலுத்த முடியாமல் தடுமாற செய்கிறது. முன்னே செல்லும் வாகனங்கள் சரிவர தெரியாமல் விபத்துகளை ஏற்படுத்துகிறது. எனவே, நெடுஞ்சாலைகளில் சென்டர் மீடியன்களில் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக வளைவு பகுதிகளில் அரளி செடி மறைப்பு இருப்பதை உறுதிப்படுத்த நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Vasan
ஆக 18, 2025 20:48

We need to have garden in the median of the roads. The Outer Ring Road ORR in Secunderabad is a classic example for a world class road. We need to develop such roads in Tamilnadu also.


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஆக 18, 2025 18:25

இந்தியாவில் driving license வாங்க பணம் கொடுத்தால் போதும். driving license கிடைத்துவிடும். சாலை விதிகளைப்பற்றி ஒரு மண்ணும் தெரியாது. தெரிய வேண்டிய ஒரு அவசியமும் இல்லை. மக்களைப்பற்றி கவலைப்படக்கூடிய அரசியல் நமது நாட்டில் 0.1 % கூட இல்லை.


Narasimman Lakshminarasimhan
ஆக 18, 2025 15:20

சரி தான் . திண்டுக்கல் to தேனி, போடி, கம்பம் ரோடு பார்த்ததுண்டா ? இன்னும் இரு 2 வழி சாலை தான். அப்போ இந்த ரோட்டில் எப்படி எவ்வளவு பயங்கரமா கண் கூசும்? ஏன்னா இந்த ரோட்டில் வண்டி ஓட்டுறவன் எல்லாம் மனுஷனே கிடையாது. உனக்கு கண் கூசினா என்னா நீ செத்தா என்ன? ஜல்லிக்கட்டு நாயகனுக்கே வெளிச்சம். அவர் என்ன செய்ய முடியும் இப்பதான் 2001ல் இருந்து தான் அவர் MLA.


K Anbazhagan
ஆக 18, 2025 15:17

எதிர் திசை மட்டும் அல்ல சென்னையில் பல முக்கிய சாலைகளில் போகும் திசைலே விளக்குகலை போட்டு கொண்டு இரவு நேரத்தில் ராங் சைடில் வருகிறார்கள் என்ன செய்வது எதை யார் கேட்பது உயிரை கையில் பிடித்து கொண்டு தினமும் செல்கிறேன்


பெரிய குத்தூசி
ஆக 18, 2025 07:33

இது மிக அவசியமானது, தேசிய சாலை நிறுவனம் உடனடியாக கவனிக்குமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை