உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மலையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

மலையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் மலையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியும், குளக்கரைகளில் மரங்களை நடவு செய்தும் சுற்றுச்சூழலை காக்கும் முயற்சியை பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் செய்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ஒட்டன்சத்திரம் நகரமானது அருகருகே மலைகள் சூழ அமைந்துள்ளது. தன்னார்வ அமைப்புகளும், நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்களும் பல வகையான மரக்கன்றுகளை நட்டு வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றன. இதன் பயனாக பல இடங்களில் மரக்கன்றுகள் நன்றாக வளர்ந்து மரங்களாக மாறி வருகின்றன. இன்னும் சில மாதங்களில் இவை பெரிய மரங்களாக வளர்ச்சி அடைந்து பசுமையாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாற்றம் பெற்று விடும். மலைப்பகுதியில் சுற்றுச்சூழலை பாதிக்கும் முக்கிய காரணியாக இருப்பது, அங்கு வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்தான். இரை தேட வரும் விலங்குகள் இவற்றை உண்பதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறக்கும் நிலைக்கு சென்று விடுகின்றன. இந்த விலங்குகளை பாதுகாக்கவும், மலைப்பகுதியில் சுற்றுச்சூழலை பேணவும் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் செயல் படும் நாட்டு நலப்பணி திட்ட அமைப்பின் சார்பில் குழந்தை வேலப்பர் மலையில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இதர குப்பைகள் அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை