போக்சோ கைதி தப்பி ஓட்டம்
சாணார்பட்டி: சாணார்பட்டி பகுதி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை 2024 டிச. 21 இரவு மாலைமேடு புதுார் பகுதியை சேர்ந்த மனோஜ் 30 ,கத்தியை காட்டி பாலியல் தொந்தரவு செய்ய முயன்றார்.சத்தம் போட அக்கம் பக்கத்தினர் மனோஜ்க்கு தர்மஅடி கொடுத்தனர். சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் கைது செய்தார். காயமடைந்த மனோஜ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது தப்பினடார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.