உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்.....

தொழிலாளி மாயம்எரியோடு: வடமதுரை செங்குறிச்சியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி முத்துச்சாமி 32. எரியோடு ஓட்டல்களில் பணிபுரிந்தார். டிச.6 முதல் காணவில்லை. எரியோடு போலீசார் தேடுகின்றனர்.தேனீக்கள் கொட்டியதால் காயம் வடமதுரை:மோர்பட்டி ராமன்செட்டிகுளத்தில் கோப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று காலை ஆடு,மாடு மேய்த்தனர். அங்கிருந்த தேனீ கூடு கலைந்து கருப்புசாமி 36, சிங்கராயர் 58, சண்முகம் 60, பூரண மணி 65 ஆகியோரை கொட்டியது. இதனால் உடல் நல பாதிப்பிற்குள்ளான இவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.போதை பெண் கைதுபழநி: பழநி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் புறக்காவல் நிலையம் உள்ளது. இங்கு போலீசார் அமர இருக்கைகள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு திடிரென இங்கு நுழைந்த பெண் புறக்காவல் நிலையத்திலிருந்த இருக்கைகளை துாக்கி வெளியே வீசினார். திருச்சி மாவட்டம் லால்குடி பழனியம்மாள் 55, மது போதையில் இருந்தது தெரிந்தது. பழநி டவுன் போலீசார் அவரை கைது செய்தனர்.விபத்தில் பெண் காயம்எரியோடு: குஜிலியம்பாறையை சேர்ந்தவர் வேணி 36. வடுகம்பாடி கோம்பை பிரிவு அருகே சென்றபோது அவ்வழியே வந்த மினி டிப்பர் லாரி மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. விபத்தில் காயமடைந்த வேணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை