உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்....

தற்கொலைதிண்டுக்கல்: கள்ளிப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சேகர்40. குடும்ப பிரச்னையால் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.புகையிலை விற்றவர் கைதுதிண்டுக்கல்: பாலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்பு . பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தார். தாலுகா போலீசார் கைது செய்தனர்.கடைகளை உடைத்து கொள்ளைவடமதுரை :வடமதுரை திண்டுக்கல் ரோட்டில் சந்தை எதிர்புறம் அடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து கொள்ளை நடந்துள்ளது. இப்பகுதியில் சசியின் இ சேவை மையத்தில் ரூ.5 ஆயிரம் பணம், பாலாஜியின் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் பொருட்கள் ,மகேந்திரனில் டீக்கடையில் பணம் திருடு போயிருந்தன. கேமரா பதிவுபடி வட மாநில நபர் கொள்ளையில் ஈடுப்பட்டது தெரிந்தது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.மகளுடன் தாய் மாயம்நத்தம்: பஞ்சயம்பட்டியை சேர்ந்தவர் நடராஜன் 32. இவரது மனைவி பஞ்சவர்ணம் 27. இவர்களுக்கு யாசினி என்ற மகள் உள்ளார். பிப்.16 காலை பஞ்சவர்ணம், மகளுடன் மாயமானார். நத்தம் -இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை