கொடை பிரையன்ட் பூங்காவில் பயணிகளை கவரும் பாப்பி பூ
கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் ஆப் சீசனில் பூத்துள்ள பாப்பி பூவை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இப்பூங்காவில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் மலர்கண்காட்சி நடக்கும். இதற்காக மலர் படுகைகள் தயார் செய்து பூச்செடிகள் நடவு செய்வர். அப்போது லட்சக்கணக்கான மலர்கள் பூத்திருப்பதை பயணிகள் பார்வையிட்டு பரவசமடைவர்.இவை தவிர்த்து ஆப் சீசனான செப்டம்பரில் பயணிகளை ஈர்க்க இரண்டாம் கட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. இதன்படி நடவு செய்யப்பட்ட பாப்பி செடிகள் தற்போது அழகுற பூத்துள்ளன. ஆரஞ்சு நிறத்தில் பூத்துள்ள இவற்றை பயணிகள் ஆர்வமுடன் கண்டு இதன் பின்னணியில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இவை அக்டோபர் இறுதி வரை பூக்கும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர்.