உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

ரெட்டியார்சத்திரம்: எம்.அம்மாபட்டியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் ஆர்.சி., தொடக்கப்பள்ளியில் நடந்தது. ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் ஆராதனா முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் ஹெலன் கிறிஸ்டினா வரவேற்றார். ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டாரபட்டி, மேலப்பட்டி, மாங்கரை, கணேசபுரம் பகுதிகளை சேர்ந்த பலருக்கு, சிகிச்சை,உடல் நல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன், கமாலுதீன், அரவிந்த், வசந்த், சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை