உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மாணவர்களுக்கு பரிசளிப்பு

 மாணவர்களுக்கு பரிசளிப்பு

வடமதுரை: அய்யலுார் மலை சார்ந்த பகுதிகளான மம்மானியூர், ஊரானுார், ஒண்டிபொம்மன்பட்டி, சீத்தப்பட்டி, குண்டாம்பட்டி உள்பட 15 கிராமங்களில் இந்தியன் நிலைத்த சமூக செயல்பாட்டு நிறுவனம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் நடக்கிறது. இவர்களுக்கு பலவித போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் பாகாநத்தத்தில் பரிசளிப்பு விழா இசை நிர்வாக அறங்காவலர் மகாலட்சுமி தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா வரவேற்றார். நிறுவன ஆலோசகர்கள் சின்னையா, ஸ்ரீகாந்த், திட்ட ஆலோசகர் சுரேஷ்கண்ணா, முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜரத்தினம், துணைத்தலைவர் சுபாஸ், கூட்டுறவு சங்க செயலாளர் ஐயப்பன், சிறு கிணறு சிறுதானிய கம்பெனி இயக்குனர் அசோகன், வட்டார இயற்கை விவசாயிகள் சங்க தலைவர் சின்னையா பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் வீரமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை