உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பஸ் டிரைவர் பேச்சுக்கு எதிர்ப்பு: மறியல்

பஸ் டிரைவர் பேச்சுக்கு எதிர்ப்பு: மறியல்

வேடசந்தூர்: --பஸ் டிரைவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜி.நடுப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன்45,தனது மகனை ஒட்டன்சத்திரம் செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏற்றி விட்டார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தால் படிக்கட்டுகளில் தொங்கியப்படி நின்றனர். இதை கவனித்த ரவிச்சந்திரன் பஸ் டிரைவரிடம் ஏன் இவ்வளவு கூட்டத்தை ஏற்றுகிறீர்கள். அனைவரும் உள்ளே சென்ற பிறகு பஸ்சை ஒட்டி செல்லுங்கள் என கூறினார். பஸ் டிரைவர், படியில் தொங்குபவர்கள் கீழே விழுந்து இறந்தால் இறக்கட்டும். என்ன செய்வது என கூறியப்படி பஸ்சை எடுத்து சென்றார். அதே வழித்தடத்தில் மீண்டும் பஸ் வந்த போது ஊர் மக்கள் ஒன்று திரண்டு பஸ்சை மறித்து மறியல் செய்தனர். டிரைவர் பேசியதை கண்டித்தனர். பஸ் டிரைவர் வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி