உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மினி ஸ்டேடியம் அமைக்க எதிர்ப்பு : மின் கோபுரத்தில் ஏறி போராட்டம்

 மினி ஸ்டேடியம் அமைக்க எதிர்ப்பு : மின் கோபுரத்தில் ஏறி போராட்டம்

செம்பட்டி: ஜே.புதுக்கோட்டை அருகே மலைமேடு பகுதியில் வசிக்கும் ராஜ கம்பளத்தாருக்கு பாத்தியப்பட்ட பொம்மையை சாமி, நாகம்மாள் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தை, பங்குனி மாதங்களில் மாலை தாண்டும் திருவிழா உள்ளிட்ட வழிபாடுகள் நடத்துவது வழக்கம் .இதன் அருகே அரசு மினி ஸ்டேடியம்(விளையாட்டு மைதானம்) அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவாய் துறை அதிகாரிகள் முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளனர். இருப்பினும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இச்சூழலில் நேற்று ஜே.புதுக்கோட்டையை சேர்ந்த லோகநாதன் 36, மகாலட்சுமி 40, உட்பட சிலர் இங்குள்ள உயர்மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மினி ஸ்டேடியம் எதிராக கோஷங்கள் எழுப்பினர். தாசில்தார் முத்து முருகன் பேச்சுவார்த்தை நடத்த உயர்மின் கோபுரத்தில் இருந்து இறங்கி வந்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !