மேலும் செய்திகள்
ஆபாச இ மெயில் விவகாரம் மின்பொறியாளர் 'சஸ்பெண்ட்'
21-Jun-2025
வத்தலக்குண்டு:கோம்பைப்பட்டியை சேர்ந்தவர் ராஜாங்கம் 36. கண்ணாபட்டியில் செயல்படும் தனியார் தார் கலவை தொழிற்சாலையில் பணியாற்றினார். நேற்று முன் தினம் ராஜாங்கம் பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கி இறந்தார். தொழிற்சாலை நிர்வாக அஜாக்கிரதை காரணமாக ராஜாங்கம் மின்சாரம் தாக்கி இறந்ததால் உரிய நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தி வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் உடலை வாங்காமல், அவரது உறவினர்கள் வத்தலக்குண்டு போலீஸ் ஸ்டேஷன் முன்பு மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளிக்க கலைந்து சென்றனர்.
21-Jun-2025