வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வனப்பகுதி என்பதே வனவிலங்குகளின் இருப்பிடம். வனங்களை நீங்கள் ஆக்ரமித்து யானைகளை விரட்டுங்கள் என்றால் என்ன நியாயம்? உங்களைத்தான் அங்கிருந்து அப்புறப்படுத்தனும்.
தாண்டிக்குடி: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாண்டிக்குடி பெரியூரில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.பெரியூரில் இரு மாதங்களாக முகாமிட்டுள்ள காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன. தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகளை அச்சுறுத்துகின்றன. இதில் இரு யானைகள் பெரியூர் ஊராட்சி பள்ளத்துகால்வாய், பாறைபட்டி, கவுச்சிகொம்பு, மன்றவயல், நல்லுார் காடு பகுதிகளில் முகாமிட்டுள்ளன. மலைவாழை பயிர்களை துவம்சம் செய்கின்றன. பந்தல் காய்கறிகள், காபி, மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பயிர்களும் இவற்றிடமிருந்து தப்பவில்லை. வனத்துறை பெயரளவிற்கு ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.பயிர் சேதத்தை கணக்கிட்டு இழப்பீடு வழங்குவது குறித்து விவரத்தை வனத்துறை சேகரிக்கும் பணியை முதன்மையாக செய்து வருகிறது. ஆனால் யானைகளை அடர் வனப்பகுதியில் விரட்டும் நடவடிக்கையில் வனத்துறை ஆர்வம் காட்டாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.விவசாயி ஒருவர் கூறியதாவது: புவிசார் குறியீடு பெற்ற மலை வாழை யானை வரவால் அடியுடன் பாதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் பயணிக்க முடியாத நிலை உள்ளது. விவசாயிகள், வாகன ஓட்டிகளை யானைகள் விரட்டும் போக்குள்ளது. காபி சீசன் துவங்கியுள்ள நிலையில் அச்சத்துடன் தோட்டத்திற்கு செல்கிறோம். விவசாய பணிகளுக்கு கூலியாட்கள் வர தயங்குகிறார்கள். இதனால் மலைப்பகுதியை விடுத்து தரைப்பகுதிக்கு ஏராளமான விவசாயிகள் செல்ல துவங்கி விட்டனர். பயிர் சேதத்திற்கும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு கிடைக்காமல் தாமதம் ஏற்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வனப்பகுதி என்பதே வனவிலங்குகளின் இருப்பிடம். வனங்களை நீங்கள் ஆக்ரமித்து யானைகளை விரட்டுங்கள் என்றால் என்ன நியாயம்? உங்களைத்தான் அங்கிருந்து அப்புறப்படுத்தனும்.