உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரேஷன் கடைகளில் தரமான அரிசி அமைச்சர் சக்கரபாணி தகவல்

ரேஷன் கடைகளில் தரமான அரிசி அமைச்சர் சக்கரபாணி தகவல்

ஒட்டன்சத்திரம்: பல்வேறு நடவடிக்கைகளால் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்பட்டு வருவதாக'' உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.ஒட்டன்சத்திரம் ஒன்றியம் மண்டவாடி, ஐ.வாடிப்பட்டி, குத்திலுப்பை, ஓடைப்பட்டி, கேதையுறம்பு, புலியூர்நத்தம், ஜவ்வாதுபட்டி ஊராட்சிகளில் ரூ.12.10 கோடிக்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.1.57 கோடி மதிப்பிலான பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அவர் பேசியதாவது:ரூ.1000 கோடியில் காவிரி குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு நடவடிக்கைகளால் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. பரப்பலாறு அணையை துார் வார முதல்வர் அனுமதி அளித்துள்ளார். ஏழை மக்களுக்கு வீடு கட்டி வழங்கும் வகையில் கருணாநிதி கனவு இல்லம் திட்டத்தில் 8 லட்சம் வீடுகள் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே கட்டப்பட்டு சேதமடைந்த 2.5 லட்சம் வீடுகளை பழுது பார்க்க ரூ.2000 கோடி, 2000 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுவதற்கு ரூ.365 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார் என்றார்.திட்ட இயக்குனர் திலகவதி, தாசில்தார் சசி, வட்ட வழங்கல் அலுவலர் பிரசன்னா, ஒன்றிய தலைவர் அய்யம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், காமராஜ் , ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ