உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 3000 சாக்பீசில் ராதாகிருஷ்ணன் உருவம்

3000 சாக்பீசில் ராதாகிருஷ்ணன் உருவம்

தொப்பம்பட்டி: தொப்பம்பட்டி தும்பலபட்டி சங்கர் பொன்னர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எட்டாம் வகுப்பு பயிலும் 50 மாணவிகள் சாக்பீசில் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவத்தை வடிவமைத்துள்ளனர். இதற்கு 3000 சாக்பீஸ் பயன்படுத்தி உள்ளனர். 10 அடி உயரம் 6 அடி அகலம் உள்ள உருவப்படத்தை நான்கு மணி நேரத்தில் காட்சிப்படுத்தினர். மாணவிகளை சங்கர் பொன்னர் அறக்கட்டளை தலைவர் நடராஜன், செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் உதயகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் ரச்சுமராஜூ, ஓவிய ஆசிரியர் விஜி ,ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !