உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  அய்யலுார் - திருச்சி இடையே ரயில்பாதை பாதுகாப்பு வேலி

 அய்யலுார் - திருச்சி இடையே ரயில்பாதை பாதுகாப்பு வேலி

வடமதுரை: அய்யலுாரில் இருந்து திருச்சி வரை ரயில் பாதையை பாதுகாக்கும் வகையில் எல்லைச்சுவர், உலோகத்திலான பாதுகாப்பு வேலி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பாதைக்குள் கால்நடைகள் வருவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தடுக்கவும் வகையில் தண்டவாளப்பாதை, ரயில்வே நிலங்களையொட்டி சுவர், உலோகத்தில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி தற்போது முக்கிய போக்குவரத்து தடங்களுக்கு முன்னுரிமை தந்து தேர்வு செய்து பணி அடுத்தடுத்து நடக்கிறது. குறிப்பாக இருவழிப்பாதை தடங்களுக்கு முக்கியத்துவம் தரப் படுகிறது. அதன்படி, அய்யலுாரிலிருந்து, திருச்சி வரை இப்பணி செய்ய திட்டமிட்டு ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் சுவர் போன்ற கட்டமைப்பும், மற்ற இடங்களில் உலோகத்திலான வேலி என ரயில்பாதைக்கு இருபுறமும் 120 கி.மீ., துாரத்திற்கு பணி செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை