உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ராமர் கோயில் நிகழ்ச்சி நேரலைக்கு ஏற்பாடு

ராமர் கோயில் நிகழ்ச்சி நேரலைக்கு ஏற்பாடு

திண்டுக்கல் : அயோத்தியில் நடக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ், காசி ராமேஸ்வர தீர்த்தம், அட்சதை, ராமர் பட்டாபிஷேக படம் உள்ளிட்டவை பூஜாரிகள் பேரமைப்பு சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாநில செயலர் உதயகுமார் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் சரவணக்குமார் பூஜாரிகள் இணைந்து வழங்கினர். அதேபோல் அன்றைய தினத்தில் அனைத்து வீடு, கோயில்களில் தீபம் ஏற்றி வழிபடுவது, கும்பாபிஷேகத்தை நேரலையில் பார்ப்பது போன்ற விஷயங்கள் வலியுறுத்தப்பட்டது. நேரடி ஒளிபரப்பு ஆவிளிப்பட்டி ஆதி சுயம்பு ஈஸ்வரர் அபிராமி அம்மன் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பங்கேற்க வேண்டுமென தெரிவித்தனர். ஆதிசுயம்பு ஈஸ்வரர் - அபிராமி அறக்கட்டளை சார்பாக அயோத்தி யாத்திரை செல்லஉள்ளதாகவும் பெயரை பதிந்து கொள்ளுமாறும் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ