ரெணகாளியம்மன் கோயில் தேரோட்டம்
பழநி; பழநி ரெணகாளிஅம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பழநி ரெணகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 6 ல் சுவாமி சாட்டுதலுடன் துவங்கியது. இதை தொடர்ந்து மே 13 ல் பொன் ஆபரண பெட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அம்மனுக்கு மா விளக்கு , அக்னி சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன்கள் பக்தர்கள் செலுத்தினர். மாலையில் தேரில் அம்மன் எழுந்தருள முக்கிய வீதி வழியாக தேரோட்டம் நடைபெற்றது. இன்று முளைப்பாரி , அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது . சக்தி கரகத்தை கங்கையில் சேர்க்க விழா நிறைவடைகிறது.