உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓய்வு ஆசிரியர் நல சங்க மாநாடு

ஓய்வு ஆசிரியர் நல சங்க மாநாடு

திண்டுக்கல்: ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நல சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட மாநாடு தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மோசஸ் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் பர்வதராஜன் பேசினார். 70 வயது பூர்த்தியான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் பென்ஷன் தர தமிழக அரசு முன்வர வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூட்டா அமைப்பின் முன்னாள் மாநிலத்தலைவர் மனோகரன், மாவட்ட செயலாளர் அமல்ராஜ், வெள்ளைச்சாமி, ராசேந்திரன், ஓய்வு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !