ரோடு மறியல்
திண்டுக்கல்: நாகல்நகர் அய்யாக்கண்ணு பிள்ளை சந்து பகுதியில் 200க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட ரோடு சேதமாக உள்ளது. ரோடை சீரமைக்க வலியுறுத்தி நேற்று திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா பகுதியில் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.தி.மு.க., வட்ட கிளை செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். தெற்கு போலீசார் பேச்சுவார்த்தை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.