சாலைப் பணியாளர் சங்க மாநாடு
திண்டுக்கல் : தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்ட மாநாடு திண்டுக்கல் ஊரக வளர்ச்சித் துறை ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது.மாவட்டத் தலைவர் பாண்டி தலைமை வகித்தார். துணைத் தலைவர் முத்துப்பாண்டி வரவேற்றார். செயலாளர் வேல்முருகன் அறிக்கை வாசித்தார். மாநிலத் தலைவர் சண்முக ராஜா பேசினார்.சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். 2003-க்குப் பின்னர் பணியில் சேர்ந்த அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் ஜோதி முருகன், செயலாளர் கருணாகரன், கல்வி அலுவலக பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் சிவக்குமார் கலந்து கொண்டனர்.