உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாலை பணியாளர்கள் கூட்டம்

சாலை பணியாளர்கள் கூட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை, சாலை பணியாளர்கள் சங்கம் சார்பாக ஏ.எம்.சி. ரோட்டிலுள்ள சங்க அலுவலகத்தில் கோட்ட தலைவர் ராஜா தலைமையில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. துணைத் தலைவர் முருகேசன் வரவேற்றார். டி.என்.ஜி.இ.ஏ. மாவட்ட தலைவர் முபாரக் அலி, ஒய்வூதியர் சங்க கூட்டமைப்பு சங்க மாவட்ட தலைவர் ஜெயசீலன் முன்னிலை வகித்தனர். செயலாளர் சீனிவாசன் பேசினார். நிர்வாகிகள் மாரியப்பன், மணிகண்டன், பூசாரி, ராஜமாணிக்கம், அம்சராஜt பங்கேற்றனர். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். கோட்ட பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை