போலீசில் காதல் ஜோடி தஞ்சம்
வடமதுரை: அய்யலுார் அருகே சுக்காம்பட்டி எஸ்.புதுப்பட்டியை சேர்ந்தவர் டிரைவர் மதன்குமார் 24. வேலை தொடர்பாக சென்றபோது கரூர் மாவட்டம் மாயனுார் விரியம்பட்டி சேர்ந்த சுகுணாதேவி 21, உடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. வெளியே தெரிய சுகுணாதேவிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் துவங்கியது. காதல் ஜோடி பெற்றோருக்கு தெரியாமல் திருப்பூர் பகுதி கோயில் ஒன்றில் திருமணம் முடித்து பாதுகாப்பு கோரி வடமதுரை போலீசில் தஞ்சமடைந்தனர். பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பினர்.