வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என்னய்யா நமக்கு கொடுத்த கமிஷனுக்கு கூடுதலாக மரம் வெட்டியுள்ளார்கள். உடனே அவர்களைப் பிடித்து மீதி கமிஷனை உடனே வசூல் செய்தே ஆக வேண்டும்.
மேலும் செய்திகள்
ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு
06-Mar-2025
கொடைக்கானல்: கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி மயானத்தில் முறைகேடாக மரம் வெட்டியது குறித்து கொடைக்கானல் ஆர்.டி.ஓ., ஆய்வு செய்தார்.கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.இதையடுத்து கொடைக்கானல் ஆர்.டி.ஓ., திருநாவுக்கரசு அட்டுவம்பட்டி கிரஸ் ஊராட்சி மயானத்தில் அனுமதியின்றி மரம் வெட்டப்பட்ட பகுதியை பார்வையிட்டார். வில்பட்டி ஊராட்சியால் அனுமதிக்கப்பட்ட 55 மரங்களுக்கு கூடுதலாக வெட்டப்பட்ட விவரம் தெரிய வந்தது. மேலும் மயானத்திலும் முறைகேடாக மரம் வெட்டியது அம்பலமானது. இது தொடர்பாக கலெக்டருக்கு அறிக்கை அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் ஆய்வு செய்து முறைகேடாக வெட்டப்பட்ட மரங்களுக்கு அடையாளமிட்டனர்.
என்னய்யா நமக்கு கொடுத்த கமிஷனுக்கு கூடுதலாக மரம் வெட்டியுள்ளார்கள். உடனே அவர்களைப் பிடித்து மீதி கமிஷனை உடனே வசூல் செய்தே ஆக வேண்டும்.
06-Mar-2025