உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை

புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 5,117 மாணவிகளுக்கு ரூ.51.17 லட்சம் மதிப்பில் உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படுகிறது.அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தில் சான்றிதழ், பட்டயப் படிப்பு, இளங்கலை, தொழில்,பாரா மெடிக்கல் போன்ற படிப்புகளை பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 5,117 பயனாளிகளுக்கு ரூ.51.17 லட்சம் மதிப்பீட்டிலான உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி