பிரையன்ட் பூங்காவில் குவிந்த பள்ளி மாணவர்கள்
கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவிற்கு சென்னை சுற்றுவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் ஏராளமனோர் வருகை தந்தனர். இங்குள்ள புல்வெளி, மலர்படுகையை ரசித்தனர். தொடர்ந்து சிறுவர் விளையாட்டுத் திடலில் விளையாடி மகிழ்ந்தனர். மாணவர்கள் வருகையால் பூங்கா நிறைந்து காணப்பட்டது.