உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கருப்பண்ணசுவாமி கோயில் விழாவில் அரிவாள் ஊர்வலம்

கருப்பண்ணசுவாமி கோயில் விழாவில் அரிவாள் ஊர்வலம்

வத்தலக்குண்டு: முத்துலாபுரம் 1000 அரிவாள் கருப்பண்ணசுவாமி கோயில் திருவிழாவை யொட்டி பக்தர்கள் நேற்று காலை சுவாமிக்கு கிடா வெட்டி, முடி காணிக்கை செலுத்தினர். மாலையில் சுவாமிக்கு பட்டுகள் உடுத்தி அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து சாமியாடிகள் அழைத்து வரப்பட்டு பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட மூன்று அடி முதல் 21 அடி வரையிலான அரிவாள்களுக்கு பூஜைகள் நடத்தி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. அரிவாள்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்ற போது நேர்த்திக்கடன் நிவர்த்தி ஆனவர்கள் சாமியாடிகளிடம் அருளாசி பெற்று ஆசீர்வாதம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ