துவங்கியது குறுவட்ட போட்டிகள்
நெய்க்காரப்பட்டி: பழநி கல்வி மாவட்ட பகுதிகளில் அ குறுவட்ட போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. நேற்று நெய்க்காரப்பட்டி, குருவப்பா மேல்நிலைப் பள்ளியில் கபடி, டேபிள் டென்னிஸ் போட்டிகள் துவங்கின. பழநி சுற்று பகுதியில் உள்ள அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகள் பங்கேற்க உள்ளது. குருவப்பா மேல்நிலை பள்ளி தாளாளர் ராஜ்குமார் துவங்கி வைத்தார். பள்ளி குழு உறுப்பினர் ராஜாகவுதம் ,தலைமையாசிரியர் சுப்பிரமணி பங்கேற்றனர்.