உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  அரசு பஸ்சை முறையாக இயக்க கையெழுத்து

 அரசு பஸ்சை முறையாக இயக்க கையெழுத்து

நத்தம்: நத்தம் பஸ்ஸ்டாண்டிலிருந்து மூங்கில்பட்டி வழியாக பட்டணம்பட்டிக்கு தினமும் அரசு பஸ் இயக்கபட்டு வருகிறது. இரவு 7:30 மணிக்கு புறப்படும் பஸ் முன்னதாகவே 7 :00மணிக்கு சென்று விடுகிறது. மதுரைக்கு வேலைக்கு சென்று திரும்பும் கட்டுமான தொழிலாளர்கள் இந்த பஸ்சை தவற விடும் சூழ்நிலை உள்ளது. அரசு பஸ்சை முறையாக நேரத்திற்கு இயக்க கோரி நத்தம் அருகே மூங்கில்பட்டியில் மார்க்சிஸ்ட் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. கிளை செயலாளர் பவுன்ராஜ் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் குழந்தைவேல் முன்னிலை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ