உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்

அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்

சின்னாளபட்டி: ''தி.மு.க., ஆட்சியில் தான் கிராமங்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது'' என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் கனிமவள நிதி மூலம் ரூ. 20 லட்சம் மதிப்பில் ரங்கநாதபுரத்தில் இருந்து தரைத்தள தொட்டி மூலம் குடிநீர் வழங்கல் திட்டத்தை துவக்கி வைத்த அவர் பேசியதாவது;தி.மு.க., ஆட்சியில் தான் கிராமங்களுக்கான குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பல்வேறு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதால் பெரும்பாலான கிராமங்களில் முழுமையான குடிநீர் தட்டுப்பாட்டிற்கான பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு உள்ளது என்றார்.பி.டி.ஓ., தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய முன்னாள் தலைவர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை