உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருப்பதி பஸ்சுக்கு சிறப்பு பூஜை

திருப்பதி பஸ்சுக்கு சிறப்பு பூஜை

பழநி: பழநி வந்த திருப்பதி பஸ்சுக்கு சிறப்பு பூஜை செய்து துவங்கி வைத்தனர். பழநிக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வந்தபோது பழநி-யிலிருந்து திருப்பதிக்கு இயக்க கந்தனருள் அறக்கட்டளை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி ஏப்.3 ல் பழநி - திருப்பதி பஸ் சேவை ஆந்திராவில் துவக்கி வைக்கப்பட்டது. நேற்று பழநியில் இருந்து திருப்பதி நோக்கி செல்ல இருந்த பஸ்சுக்கு சிறப்பு பூஜை செய்து துவங்கி வைத்தனர். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் அனந்தசுப்பிரமணியம், சுந்தரம், நேரு, சங்கராலயம் சிவக்குமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை