உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் வழியாக அயோத்திக்கு சிறப்பு ரயில்

திண்டுக்கல் வழியாக அயோத்திக்கு சிறப்பு ரயில்

திண்டுக்கல், : மானாமதுரையிலிருந்து திண்டுக்கல் வழியாக அயோத்தி செல்லும் சிறப்பு ரயிலில் திண்டுக்கல்லிருந்து 6 பேர் பயணிக்கின்றனர்.அயோத்தியில் ஜன.22ல் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து அயோத்திக்கு மக்கள் வரும் வகையில் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இன்று இரவு 11:00 மணிக்கு மானாமதுரையிலிருந்து பயணிகளுடன் புறப்படுகிறது. நாளை (பிப்.15 )அதிகாலை 1:30 மணிக்கு திண்டுக்கல் வருகிறது. இதில் பயணிக்க திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 6 பேர் முன் பதிவு செய்துள்ளனர். ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமையில் 20 போலீசார் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் 1வது பிளாட்பாரத்திலிருந்து 5வது பிளாட்பாரம் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மானாமதுரைக்கும் திண்டுக்கல்லிலிருந்து ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணிக்காக செல்வதோடு ரயிலிலும் திண்டுக்கல்லிலிருந்து திருச்சி வரை பயணிகளுடன் ஒரு போலீஸ் பயணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி